இப்ப பாடசாலையை உருவாக்குவதில் காலம் சென்ற ஐதுரூஸ் அப்துல் லத்தீப் (அப்போதே இர்பான் வித்தியாலய அதிபர்) எம்.ஏ .சி முகைதீன் (அப்போதைய வடகிழக்கு மாகாண கல்விச்செயலாளர் )காலம் சென்ற நடராசமூர்த்தி (அப்போதைய பிராந்திய கல்வி பணிப்பாளர் திருகோணமலை )காலம் சென்ற கே. எம். பஷீர் (அப்போதைய கிண்ணியா,கோட்ட கல்வி பணிப்பாளர் )ஆகியோர் முன்னின்று உழைத்தனர். இவர்களது உழைப்பு இந்த பாடசாலை வரலாற்றில் மறக்க முடியாதது.
முன்னாள் கப்பல் துறை இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம் .ஈ .எச் .மகரூப் அவர்களின் முயற்சியினால் தற்காலிகமாக இயங்கிய தி/கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் ஆரம்ப பிரிவானது 01.02.1994 அன்று தி/ரீ.பீ ஜாயா வித்யாலயம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஓர் ஆரம்பப் பிரிவு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட ரீ.பீ ஜாயா வித்யாலயமானது அதிபர் முஸம்மில் அவர்களின் முயற்சியினாலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அவர்களின் உதவினாலும் 01.01.2016 அன்று 1சி பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு தி/கிண்ணியா/ரீ.பீ ஜாயா மகளிர் மகாவித்தியாலயம் என்ற பெயருடன் தற்போது தரம் 13 வரையிலான மாணவிகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.