ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png

அதிபர் செய்தி

Mr.S.T.நஜீம்

   தி/கிண்ணியாரீ.பீ . ஜாயா.மகளிர் மகா வித்தியாலயம்தி/கிண்ணியா ரீ.பீ  ஜாயா பாடசாலையின் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்வறன்.எமது பாடசாலை திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ளது .இது 1சி  பாடசாலையாகும் .இங்கு 48 ஆசியர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபற்று வருகின்றனர் ,அத்தேயாடு 654மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

 
  தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இக்காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இன்றியமையாததாகும். அந்த வகையில் எமது பாடசாலையில் ஆசிரியர்களின் வரவு மற்றும் மாணவர்களின் வரவு கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு விரல் அடையாளம், மாணவர்களுக்கு இலக்கமுறை அடையாள அட்டையும் வழங்கப்பட்டு அவர்களின் வரவு வெளிச்செல்லல் கணினி மையப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் வரவு நேரம்,வெளிச்செல்லல் நேரம் என்பன பெற்றோர்களின் தொலைபேசிக்கு தகவல் வழங்கப்படும்.இந்த வகையில் பாடசாலைக்கு இணையதளம் ஒன்று இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே எமது பாடசாலையில் இணையதள வடிவமைப்பினை மேற்கொள்ளும் ஆசிரியர் மாணவர்களுக்கும் மேலும் அதனை உருவாக்க பயிற்சி அளித்த அனுசரணையும் வழங்கிய cyber lowata piyapth  நிறுவனத்திற்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

 

Mr.S.T.நஜீம்
அதிபர்
தி/கிண்ணியா ரீ.பீ . ஜாயா.மகளிர் மகா வித்தியாலயம் ..