ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png
  • சகல மாணவிகளும் காலை 7. 25 மணிக்கு முன்பு பாடசாலைக்கு சமூகம் அளிக்க வேண்டும். பாடசாலைக்கு பிந்தி வரும் மாணவிகள் பாடசாலை ஒழுங்கு விதியை மீறியதாக கருதப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.
  • பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் ஒழுங்காற்று குழுவின் மேற்பார்வையின் கீழ்மாணவ தலைவிகளால் அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் விவரங்கள்” தாமதமாக வரும் மாணவிகள் பதிவேட்டில்” பதியப்படும்.தாமத வகைகள் அவர்கள் மீது பாடசாலை கொண்டுள்ள நன்மதிப்பினை குறைக்கும் செயலாக அமையும்.
  • மாணவிகள் பாடசாலைக்கு சமூகம் அளிக்க இயலாமை ஏற்படின் அதற்குரிய காரணத்தை குறிப்பிட்டு அதிபரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் திடீரென ஏற்படும் காரணங்களினால் மாணவிகள் பாடசாலைக்கு சமூகம் தர இயலாமை ஏற்படும் மாணவிகள் விடுமுறையின் பின் மீண்டும் வருகை வரும் நாளில் விடுமுறை பதிவு கொப்பியை பூர்த்தி செய்து அதிபரிடம் காட்டி ஒப்பம் பெற வேண்டும். தொடர்ச்சியாக சுகவீன காரணமாக மூன்று நாட்களுக்கு மேல் சமூகம் அளிக்காதவர்கள் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஒரு வருடத்தில் மாணவர்களின் வரவு என்பது சதவீதம் இக்குறைவாக காணப்படுகின்ற அவர்கள் க. பொ.த( உயர்தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • மாணவிகள் பாடசாலை நடைபெறும் நேரங்களிலும் ,பாடசாலை விழாக்களிலும், பகிரங்க தேர்வுகளிலும் பாடசாலையை அடையாளப்படுத்தும் பாடசாலை கூடிய எந்த ஒரு வெளி நிகழ்விலும் பாடசாலை சீருடைகளையே கட்டாயம் அணிதல் வேண்டும்.
  • அபாயகரமான ஒளடதங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இலத்திரன்கள் சாதனங்கள் போன்றன பாடசாலை வளாகத்தினுள் எப்போதும் எடுத்து வர முடியாது.
  • பாடசாலை நேரத்தில் மாணவர்கள் இடைவெளி நேரும் தவழ்ந்து ஏனைய நேரங்களில் வகுப்பை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியை மாணவிகள் பொறுப்பாசிரியர்களிடம் பெற்றிருக்க வேண்டும்.
  • வகுப்பறை விட்டு தேவை கருதி வெளியேறும் மாணவிகள் EXIT CART உடன் தரித்திருத்தல் வேண்டும்.
  • பாடசாலை நேரத்தில் மாணவர்கள் பின்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
  • Relax Music- இடைவேளை கடமைகளை முடித்துவிட்டு வகுப்பறைக்குள் துரிதமாகச் செல்ல.
  •  School End Music- பாடசாலை முடிவடையும் நேரம்.வகுப்பறைகளை மீள ஒழுங்கமைத்தலும், துப்புரவு செய்தலும்.
  •  முதலாவது மணி- வகுப்பிற்கு வெளியே உயர அடிப்படையில் வரிசையாக நிற்றல்.
  •  இரண்டாவது மணி- அமைதியாகுதல்.சலவாத்து சொல்லுதல்.
    வரிசையாக அமைதியாய் பாடசாலையை விட்டு வெளியேறுதல். 
  • பாடசாலை நேரத்தில் முறையான அனுமதி இன்றி மாணவிகள் எவரும் வெளியில் செல்ல முடியாது.
  •  ஆசிரியர்களால் அறிவிக்கப்படும் மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயம் சமூகம் தரல் வேண்டும்.
  •  ஆய்வுகூடம், நூலகம், மனைப் பொருளியல் அறை, கணினி பிரிவு போன்றவற்றுக்கு செல்லும் போதும் திரும்பி வரும்போதும் மாணவிகள் ஒழுங்கை பேணுதல் வேண்டும்.
  •  பாடசாலைக்கு வரும்போது தங்க நகைகள் அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. காதில் மட்டும் ஒரு சிறியதோடு அணியலாம். பெருமதியான தங்க நகைகள் அணிந்து வரும் சந்தர்ப்பத்தில் அவை தொடர்பான இழப்புகளுக்கு பாடசாலை நிர்வாகம் எந்தவித பொறுப்பும் ஏற்காது.
  •  பாடசாலை நேரத்தில் திடீரென நோய்படுதல் மற்றும் விசேட சந்தர்ப்பங்களில் மாணவிகள் வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படின் பின்வரும் ஒழுங்கு முறைகளை பின்பற்றல் வேண்டும்.