செய்திகள்
வாசிக்காத எவரும் தம் எதிர்காலம் பற்றியோ தம் சமூகம் பற்றியோ யோசிக்க மாட்டார்கள் வாசிப்பே ஒரு மனிதனை பூரணமாக்குகிறது அதுவும் மாணவப் பருவத்தினரின் ஊக்க மருந்தாக அமைவது வாசிப்பு பழக்கமே என்றால் அதனை யாராலும் மறந்து விட முடியாது மறுத்து விட முடியாது எனவே இதனை கரைத்துக் கொண்டு மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் unicef ஆதரவில் 2012ல் தேர்வு செய்யப்பட்ட ஏழு பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
கல்வி அமைச்சின் இணைப்பாட செயற்பாடுகள் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் சமாதான கல்விப் பிரிவின் ,சமூக இசைவாக்கம் மற்றும் சமாதான கல்வி அழகு மற்றும் தேசிய கல்வி நிர்வாகத்தின் சமூக விஞ்ஞான துறையின் குடியல் கல்வி செயல் திட்டம் என்பதை இணைந்து மாணவர் பாராளுமன்ற வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.